திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (17:08 IST)

பாலிவுட் படத்தில் பஞ்சாபி பெண்ணாக அமலா பால் - வைரல் போட்டோ

நடிகை அமலாபால் பஞ்சாபி பெண்ணாக மாறிய புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
 நடிகை அமலாபால், தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் படு பிஸியாக  நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. இந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. 
 
இதையடுத்து நடிகை அமலாபால், ‘ஆடை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தது. இந்தப் படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்பது படத்தின் போஸ்டரை பார்த்த உடனே தெரியவந்தது. 
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், நடிகை அமலாபால் அடுத்ததாக  பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் பஞ்சாபி பெண் கேரக்டரில் நடிக்கிறாராம். 
 
தற்போது அந்தப் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.