திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (17:19 IST)

சிறுமிகள் பலாத்கார வழக்கில் சிக்கிய பெண் அமைச்சர் !

பிஹார் மாநிலத்திலுள்ள முசாபரில்பெண்கள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக சில நாட்களுக்கு முன் தேசிய அளவில் விவாதிக்கப்ப்ட்டது.
பின் இந்த காப்பகத்தை நடத்தி வந்த பிரதேஷ் தாக்கூர் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
 
அப்போது பீஹார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த மஞ்சு என்ற பெண்  அமைச்சரின் கணவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தான் வகித்து வந்த சமூக நீதித்துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
 
அதன் பின் மஞ்சு வர்மா அவரது கணவருடன் தலைமறைவானார். இருவரையும் போலீஸார் வலிவீசி தேடிவந்த நிலையில் இன்று பீஹாரில் உள்ள பெங்குசாராய் கோர்ட்டில் அவர் சரணடைந்தார்.
 
 நீதிபதி அவரிடம் விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகின்றன.