ஆண் காவலர் செய்த வேலை: விரக்தியில் பெண் போலீஸ் தற்கொலை!!

police
Last Modified திங்கள், 18 மார்ச் 2019 (12:34 IST)
திருச்சியில் ஆண் காவலர் செய்த வேலையால், அவரது காதலியான பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த குமார் மகள் ராஜ லட்சுமி(24). இவர் ஒரு பெண் காவலர்.  திருச்சியை சேர்ந்தவர் சிவக்குமார்(28). இவர் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் காவலராக பணியாற்றி வந்தார். சிவகுமா ரும் ராஜலட்சுமியும் காதலித்து வந்தனர்.
 
இவர்களது காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனால் சிவகுமாருக்கும் ராஜலட்சுமிக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
 
இதனால் மனமுடைந்த ராஜ லட்சுமி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தியை கேட்ட சிவகுமார் பதறிப்போய் இருசக்கர வாகனத்தில் காதலியை பார்க்க சென்றார். எதிர்பாராத விதமாக சிவகுமார் விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :