திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (09:23 IST)

திருச்சியை சேர்ந்த பெண்ணிற்கு நிபா வைரஸ் காய்ச்சலா? மக்கள் அதிர்ச்சி

திருச்சியை சேர்ந்த பெண்ணிற்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்த கார்த்திக், தனது தாய் ராஜேஸ்வரியை அழைத்துக் கொண்டு கேரளாவிற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஸ்வரிக்கு சளி, இருமல் ஏற்பட்டு காய்ச்சல் வந்ததுள்ளது. மாத்திரை உட்கொண்டபோதும் அவருக்கு உடம்பு சரியாக வில்லை.
இதனையடுத்து, திருச்சிக்கு திரும்பிய கார்த்திக், தாயை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். கேரளா சென்று திரும்பிய அவருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம என கருதி, மருத்துவர்கள் ராஜேஸ்வரியின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.