வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (10:03 IST)

நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு விடுமுறை

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ‘நிபா’ வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நிபா  வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கேரளாவில் உள்ள பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோர்களை உடனடியாக விடுப்பில் செல்ல கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதால் காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ள நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தாலுகா மருத்துவமனையில் ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இவர்கள் மாற்றப்பட்டனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி இருவரும்  உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி மருத்துவமனையில் இந்த இரண்டு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்த 4 டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஊழியர்களை  1 வாரத்துக்கு விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.