1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 ஜூன் 2018 (12:53 IST)

கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரம் - நாகர்கோவிலில் அதிர்ச்சி

ஏழ்மையில் வாடும் கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 
நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் தாய் நாகர்கோவில் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் என மகள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு 19 வயது முடிந்துவிட்டதால் எனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினேன். முதலில் சம்மதித்த என் மகள் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரென வீட்டை விட்டு சென்றுவிட்டாள். மேலும், காவல் நிலையத்தில் என் மீது தவறான புகார் அளித்து, என் உறவினர் ஒருவரோடு செல்ல விரும்புவதாக கூற போலீசாரும் அவருடன் என் மகளை அனுப்பிவிட்டனர்.
 
என் மகளோடு வந்தவர் பல வழக்குகளில் தொடர்புடையவர். அவரின் வீட்டிற்கு ஆண்கள் பலரும் வந்து செல்கின்றனர். எனவே, என் மகளை சந்திக்க முயன்றேன். ஆனால், அவர் அனுமதிக்க மறுக்கிறார். கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுபற்றி விசாரித்ததில் அவரும், அவரின் உதவியாளரும் விபச்சாரம் செய்து வருவது எனக்கு தெரியவந்தது.  மேலும், எனது மகள் மற்றும் அவருடன் படிக்கும் ஏழை கல்லூரி மாணவிகளை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்” என அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
 
அதோடு, தனது மகள் உள்ளிட்ட மாணவிகள் ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி தொடர்ந்து இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர் அது தொடர்பான சில புகைப்படங்கள் அடங்கிய சிடியையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
 
தனது மகள் தொடர்பான புகைப்படங்களுடன் தாயே புகார் அளித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.