1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (19:24 IST)

கள்ள உறவுக்கு மறுத்த மனைவியின் அக்காளை கொன்ற கொடூரன்...

கடந்த மாதம் 25 ஆம்தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சியாம் பாளையம் அருகே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒரு சாக்கு மூட்டையில்  கட்டி தூக்கி வீசப்பட்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இக்கொலை சம்பந்தமான விசாரணை நடத்தி வந்தனர்.
 
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்திலிருந்து தங்கத்தாலான தாலியும்,கம்மல், மோதிரம் ,வளையல்கள்  போன்றவற்றை அடையாளமாக வைத்து போலீஸார் விசரணையை தீவிரப்படுத்தினர்.
 
நிச்சயமாக நகைக்காக, பணத்துக்காக இக்கொலை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் விசாரணையை மேலும் அதிகப்படுத்தினர்.
 
அதன்பின் போலீஸ் சூப்பிரண்ட்  கயல் விழி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர்.
 
இந்நிலையில் பெண் உடலில் இருந்த நகையை வைத்து துப்பு துலங்கியதில் கொலைசெய்யப்பட்டவர் முத்துலட்சுமி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதன்பின் வேலுசாமி,குமரேசன் ஆகிய இரண்டு பேர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தனர். அவரக்ளிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.
 
வேலுசாமி கூறியதாவது:
 
’45 வயதான எனக்கு என் மனைவியின் அக்கா(முத்துலட்சுமி)வுடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி என் மனைவிக்குத் தெரியாமல்  உல்லாசம் இருந்தோம். அதன் பின் நான் முத்துலட்சுமியை தொடர்ந்து உல்லாசத்துக்கு வற்புறுத்தினேன். ஆனால்  பேரன்பேத்தி எடுத்த வயதில் இது வேண்டாம் என அவர் கூறவே எனக்கு கோபம் வந்தது துணைக்கு குமரேசனை வைத்துக்கொண்டு முத்துலட்சுமியை கொன்று விட்டேன் .’இவ்வாறு கூறியிருக்கிறார்.
 
இவரகள் இருவரும் முத்துலட்சுமியை கொலை செய்து ஒரு மூட்டையில் கட்டி உப்பாற்றின் பாலத்தில் வீசி விட்டு தப்பிவிட்டனர். பின்னர் போலீஸார் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயந்து போலீஸில் சரணடைந்துவிட்டனர். 
 
கொலையுண்ட முத்துலட்சுமியின் கணவர் முருகன் ஆவார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.