செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (12:54 IST)

பிரச்சாரத்திற்கு வந்தால் பலாத்காரம்: பாஜக அராஜகம்

பாஜகாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் கூட்டு பலாத்காரம் செய்வோம் என கோவா காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேவா காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தியா ஷேத்கர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு, 
 
சிரோத்காரின் ஆதரவாளர் ஒருவர் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் மிக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்டி பேசினார். பின்னர் சிதோத்காருக்கு எதிராக தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். 
 
பெண் தலைவர் ஒருவரின் இம்மாதிரியான புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்கல் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் பலாத்காரத்தை பெண்களை அடக்க ஒரு கருவியாக பயன்படுத்துவது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், பாஜகவை சேர்ந்த சிரோத்கார் இதற்கு எந்த எதிர்ப்பையும், பதிலையும் தரவில்லை. இவர் சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.