வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:16 IST)

திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்குப் பிறகு உயிரிழப்பு...மருத்துவர் கைது

சேலம் மாவட்டத்தில் திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்குப் பிறகு உயிரிழந்தது தொடர்பாக  மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் திருமணம் ஆகாத நிலையில், கர்ப்பம் ஆன நிலையில் இதையறிந்து அதிர்ச்சசி யடைந்த பெற்றோர், அவரை அங்கேயுள்ள தனியார் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி மகளை அனுமதித்தனர்.

இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி  சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார்.  மேலும், பிறந்த குழந்தையும் இறந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து, போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்தது. உடனே குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிறுமிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் செல்லம்மாள் மீது போக்சோ  உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்