வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (15:27 IST)

கை கழுவாம கிராமத்துக்குள்ளேயே நுழைய கூடாது! – கறார் காட்டும் கிராமம்!

கொரோனா பரவாமல் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் தஞ்சையில் உள்ள கிராமத்தின் முன்னெடுப்பு வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகள், கால்களை சுத்தமாக கழுவ மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா முன்னெச்சரிக்கையாக செயல்படும் செந்தலைவயல் என்னும் அந்த கிராமத்தினர் ஊரின் நுழைவாயில் பகுதியில் கொரோனா விழுப்புணர்வு பதாதைகளுடன், கை கால்களை கழுவிக் கொள்ள தண்ணீர், சோப்பு உள்ளிட்டவற்றையும் வைத்துள்ளார்களாம். ஊருக்கு வருபவர்கள் கை கால்களை சோப்பு போட்டு கழுவி கொண்டு ஊருக்குள் போக சொல்லி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் வீடுகளிலும் முகப்பில் கை, கால்களை கழுவி கொள்ள தண்ணீர் வைக்க சொல்லியும் அறிவுறுத்தி வருகிறார்களாம்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக செயல்படும் இந்த கிராமத்தை போலவே மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என சிலர் கிராமத்து நடவடிக்கையை பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.