செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 21 மார்ச் 2020 (14:45 IST)

கையில்லாத நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டுக்குறேன்... ராகவா லாரன்ஸின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை அழித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

மேலும் சிலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, விராட் கோலி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் விழிப்புணர் வீடியோக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கை இல்லாத மாற்று திறனாளி ஒருவருடன் கொரோனா வைரஸ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்...