செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 21 மார்ச் 2020 (14:22 IST)

சென்னை கடற்கரைகளுக்கு கேட் போட்ட கொரோனா!

சென்னையில் கடற்கரைகளுக்கு செல்ல இன்று பிற்பகல் 3 மணி முதல் அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். 
 
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும் சிறப்பாக செய்ல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளுக்கு செல்ல இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மக்களுக்கு அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.