1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:23 IST)

காற்றுடன் பெய்த கனமழையால் வேறோடு விழுந்த மரம்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பது குறித்தும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் பலத்த காற்றுடன் மற்றும் இடியுடன் பெய்த மழையின் காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவிக சாலையில் மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில் இன்னும் 1 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால் அலுவலகம் செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது