1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:02 IST)

கர்ணன் படத்தில் திருத்திய பின்னரும் அதிருப்தி தெரிவித்த உதயநிதி!

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் அதிமுக ஆட்சியில் நடந்ததாகவும் ஆனால் திமுக ஆட்சியில் நடந்தது போல் காட்டப்பட்டுள்ளது என்றும் உதயநிதி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் 
மேலும் இதுகுறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் பேசி இருப்பதாகவும் அவர்கள் அதனை மாற்ற ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முதல் திரையரங்குகளில் 90களின் இறுதியில் என்று மாற்றப்பட்டிருந்தது. இதற்கும் உதயநிதி தற்போது தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்
 
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன
 
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.