செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (06:33 IST)

சென்னையில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் வேட்கையால் தவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இன்று அதிகாலை 5.30 க்கு சரியாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது 
 
சென்னை தேனாம்பேட்டை மயிலாப்பூர் அண்ணா சாலை எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.