1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A teenager who died while playing cricket

கிரிக்கெட் விளையாடியபோது மரணமடைந்த வாலிபர்

cricket
பெரியபாளையம் அருகிலுள்ள ஆரணியில் வசித்து வந்தவர் மனோஜ் குமார்(36). என்.பி.ஏ, பிஎச் டி படித்துவிட்டு, இவர் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது பொங்கல் விடுமுறையை ஒட்டி, கம்மார் பாளையம் என்ற கிராமத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, இவருக்கு மூச்சுத்திணறல் காரணாமாக மைதானத்தில் மயங்கி  விழுந்த அவரை  நண்பர்கள் மீட்டு,  மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்  மனோஜ் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை பிடித்த காளையர் விஜய்!