வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (10:56 IST)

சகமாணவர்கள் முன் திட்டிய ஆசிரியர் - விரக்தியில் மாணவி தற்கொலை முயற்சி

திருநெல்வேலியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால் மனமுடைந்த மாணவி பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
 
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் தம்புராட்சி(17), பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று பள்ளிக்கூடத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தம்புராட்சி, பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.