1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (11:57 IST)

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது

ராஜபாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம், அப்படி பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பிள்ளைகளை காக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.
 
ஆனால் ராஜபாளையம் திருவள்ளுவர் நகரில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் முருகேசன், என்பவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் தலைமை ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.