1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A raid in highways department at Dindugul

நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1.50 லட்சம் பறிமுதல்..!

நெடுஞ்சாலை
திண்டுக்கல் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனை செய்ததில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் பாண்டியன் நகர் என்ற பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணி செய்யும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென இந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அலுவலக கண்காணிப்பாளர் மருதநாயகம் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் நிதி அமைச்சர் பலி என தகவல்..!