திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (19:27 IST)

ஜெகத்ரட்சகன் பள்ளியில் ரெய்டு; ஆவணங்களை அள்ளி சென்ற வருமான வரித்துறை!

jagadhratchagan
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி ரெய்டு நடந்து வரும் நிலையில் அவரது பள்ளியிலிருந்து ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



கடந்த சில காலமாக திமுக தொடர்பான முக்கிய புள்ளிகள் வீடுகள், அலுவலகங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகளால் தமிழக அரசியலே பரபரப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் அந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.

கடந்த 5 நாட்களாக ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறாக இன்று ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்ட் இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 4 அட்டை பெட்டிகளில் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பிரமுகர்கள் சொந்தமான இடங்களில் நடந்து வரும் தொடர் ரெய்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K