1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (07:37 IST)

எம்.ஜி.எம். குழுமத்தில் 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை!

income tax
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இரண்டு நாட்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 
 
இன்று மூன்றாவது நாளாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்றும் சென்னை விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்றும் வருமானத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்