புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (19:41 IST)

ஓட்டு போட்டாயா நாயே??.. வைரலாகும் போஸ்டர்

”காசு வாங்கிய நாயே!! ஓட்டு போட்டாயா?’ என்று சுவரில் ஒட்டிய ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இணையத்தில் எங்கோ ஒரு ஊரில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் “காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டாயா?” என அச்சிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் தான் நிச்சயாமாக இந்த போஸ்டரை அச்சிட்டிருக்க வேண்டும் என தெரிய வருகிறது. அந்த வேட்பாளர் சுயேட்சை வேட்பாளரா? அல்லது பிரதான கட்சிகளை சேர்ந்தவரா? என்ற விவரம் தெரியவில்லை.