வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (17:11 IST)

வட மாநிலத்தவரின் கடைகளுக்கு பூட்டு !

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டு, அவர்களை தமிழகத்தை விட்டு வெளியேறும்படி ஒட்டிய சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்கள் சிலர் இனிப்பு மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலையில் அவர்களின் கடைகளில் பூட்டுகள் மற்றும் சுவரொட்டிகள் தொங்கவிட்டு உள்ளுர்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
 
அதனால், வடமாநிலத்தவர்கள் தங்கள் கடைகளைத் திறக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரவில் அவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டதால் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.