வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 9 மே 2020 (16:20 IST)

ஓய்வு பெற்ற ஆசிரியரை தாக்கிய போலீஸ்காரர்…வைரலாகும் வீடியோ

குமரி மாவட்டம் குலசேகரபுரம்  என்ற பகுதியில், ஊர் மக்களின் விண்ணப்பத்தை சரி பார்த்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியரை ஒரு போலீஸ்காரர் அடிக்கும் காட்சிகள் தற்போது பரவலாகி வருகிறது.

குமரி மாவட்டம் குலசேகரபுரம் ஊராட்சி பல்பநாபன்புதூர் நலவாரிய திட்ட பணிக்காக ஓய்வுப்பெற்ற ஆசிரியர் அவரது ஊர் மக்களின் விண்ணப்பத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, இரு போலீசார் வந்து அவரிடம்  ஏதோ கேட்க,  அதற்கு அவர் உட்கார்ந்துகொண்டே பதிலளித்தார் என்பதற்காக..

ஆசிரியர் என்றும் பாராமல் மிக மிக கேவலமான அசிங்கமான காது கொடுத்து கேட்க இயலாத வார்த்தைகளால் பேசி ஆசிரியரை தாக்கிப் பேசியுள்ளார் போலீஸ்காரர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.