வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 ஜூன் 2018 (10:32 IST)

மகன் கண் முன்னே துடிதுடித்து இறந்த பெற்றோர் - கதறித் துடித்த மகன்!

சாலை விபத்தில் தன் மண் முன்னே பெற்றோர் துடிதுடித்து இறந்ததைப் பார்த்து மகன் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் வின்செண்ட். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ரிச்சர்டு என்ற மகன் உள்ளார். ரிச்சர்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் சரவணம்பட்டியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ரிச்சர்டும், அவரது பெற்றோரும் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டனர். காரை ரிச்சர்டு ஓட்டினார். கார் இன்று அதிகாலை ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தாண்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் வின்செண்ட் புஷ்பா சம்பவ இடத்திலே பலியாகினர். 
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், படுகாயமடைந்த ரிச்சர்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரிச்சர்டு பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி கதறி அழுதார். இது பார்போரின் நெஞ்சை கதிகலங்க வைத்தது.