ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 ஜூன் 2018 (17:51 IST)

பெற்றோர்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்

பெற்றோர்கள் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் அவர்களது குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்காவின் பல்கழைக்கழக நிபுணர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
 
உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் நல்லது, கெட்டது என இரண்டுமே தொடர்ச்சியாக நிகழ்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிவேக வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன்.
 
இந்த ஸ்மார்ட்போன் மக்கள் கையின் விரல்நுனியில் இருந்து நிறைய வேலைகளை சர்வசாதரணமாக எளிதல் செய்து வருகிறது. ஆனால், இதை மக்கள் அறிவுப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவதை விட தேவையற்றவைகளுக்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 
 
குறிப்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை விட, ஸ்மார்ட்போனுடன்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதை கண்டு குழந்தைகளும், தங்களது பெற்றோர்கள் போலவே ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல்நலமும், படிப்பும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இல்லினாய்வ் மாகாண பல்கலைக்கழகம், மிக்சிகன் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.