புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 பிப்ரவரி 2021 (06:43 IST)

புதுவையில் இன்று வாக்கெடுப்பு: நாராயணசாமி அரசு தப்பிக்குமா?

புதுவையில் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் அவருடைய ஆட்சி தப்புமா அல்லது கவிழுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
புதுவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து 5 பேர் ராஜினாமா செய்தனர் என்பதும் திமுக எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மொத்தம் உள்ள 33 உறுப்பினர்களில் தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 12 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தந்துள்ளனர் 
 
எனவே இன்றைய வாக்கெடுப்பின் போது 17 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அவருடைய ஆட்சியை தப்பிக்கும் என்பதும் இல்லையேல் ஆட்சி கவிழும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின் பேரில் இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் வெற்றி பெறுவாரா அல்லது வாக்கெடுப்புக்கு முன் தனது ராஜினாமாவை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்