1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (20:07 IST)

ஸ்டாலினிடம் சொல்லி விட்டுத்தான் ராஜினாமா செய்தேன்: புதுவை திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன்

புதுவையில் ஏற்கனவே ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று மாலை திமுக எம்எல்ஏ வெங்கடேசன் என்பவரும் ராஜினாமா செய்ததால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை திமுக எம்எல்ஏ வெங்கடேசன் அவர்கள் கூறியபோது ’எனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் இன்னும் வரவில்லை என்றும் அதனால் தொகுதி மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்ய முடியாததால் நான் ராஜினாமா செய்துள்ளேன் என்றும் மற்றபடி வேறு எந்த பின்னணியும் கிடையாது என்றும் கூறினார் 
 
மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களிடம் நான் ராஜினாமா செய்யப் போவதை சொல்லி விட்டேன் என்றும் நான் எம்எல்ஏ பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்து இருக்கிறேன் திமுகவில் இருந்து விலகவில்லை என்றும் கூறினார்
 
மேலும் மாற்றுக் கட்சியில் இதுவரை சேரும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தற்போது திமுகவில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்