8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய உத்தரவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய உத்தரவு ஒன்றை தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை மூலம் அனுப்பி உள்ளது மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இந்த சுற்றறிக்கையால் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
மேலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்த வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த பரிசீலனையில் தமிழக அரசு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென தொடக்கக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது