செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (12:38 IST)

ஹைட்ரோகார்பனை எதிர்த்து போராட்டம்; களத்தில் குதித்த மாணவர்கள்..

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திரூவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தில் கொண்டுவருவதற்கு பல அரசியல் தலைவர்களும் பல சமூக ஆர்வல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்க தேவையில்லை எனவும், மக்களின் அனுமதியும் தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியதற்கு பல கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் தடை செய்யக்கோரியும், சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவிற்கும் கண்டன் தெரிவித்து திருவாரூர் அரசு கல்லூரியை சேர்ந்த இந்திய மாணவர்கள் சங்க அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.