1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (10:17 IST)

#WhoareyouEdappadi? பிரதமரை நம்பி டிவிட்டரில் அசிங்கப்படும் முதல்வர்!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WhoareyouEdappadi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தும் நாள்தோறும் நூறு இருநூறு என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 827 பேர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,529 ஆக இருந்தது இந்த நிலையில் தற்போது அது 8356ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 242 ஆக இருந்த நிலையில் தற்போது 273ஆக உயர்ந்து உள்ளது என்பதும் இதனையடுத்து கடந்த 24 மணி ஒரே நாளில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 716 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மிக விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்கள் பிரதமர் அறிவிப்பு வெளியிடு, வரை காத்திருக்காமல் ஊரடங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட்டித்துள்ளனர். ஆனால், 969 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாமக முன்வந்து ஊரடங்கை நீட்டிக்காமல் பிரதமர் அறிவிப்பிற்காக காத்திருக்கிறார். 
 
எனவே, இதனை விமர்சிக்கும் பொருட்டு சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WhoareyouEdappadi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.