செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (15:46 IST)

டிடிஎஃப் வாசனை கம்பியால் குத்தி கொலை செய்ய முயற்சியா? அதிர்ச்சி தகவல்..!

TTF Vasan
யூடியூப் டிடிஎஃப் வாசனை கம்பியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
யூடியூப் டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சர்ச்சைகளில் ஈடுபட்டு வருவார் என்பதும் குறிப்பாக அதிவேகமாக பைக் ஓட்டியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்தது. 
 
மேலும் அவர் ஜாமினில் வெளிவந்த போதிலும் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக காரில் டிரைவிங்கின்போது போனில் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் திருப்பதியில் பிராங்க் செய்ததாக அவர் மீது திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் டிடிஎஃப் வாசனை கம்பியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாக அவரே ஒரு வீடியோ பதிவு வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் கம்பியால் குத்த வந்த போது கம்பியை தட்டி விட்டு அவருக்கு அட்வைஸ் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் தற்காப்பிற்காக தான் ஒரு குச்சியை எடுத்து இருந்தால் கூட பெரிய பிரச்சனை ஆகியிருக்கும் என்றும், குத்தினாலும் குத்து வாங்க வேண்டுமே தவிர திரும்ப குத்தலாமா என கேட்டிருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னை தாக்க வந்தவர் குடிபோதையில் இருந்ததாகவும் இது குறித்த வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran