வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (09:27 IST)

காணாமல் போன பெற்றோர் பிணமாக வீடு திரும்பினர் - திருப்பூரில் நடந்த சோக சம்பவம்

திருப்பூரை சேர்ந்த வயதான தம்பதிகள் இருவர் திருச்சி அருகே சடலமாக கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் சாத்தப்பன். இவருக்கு 78 வயதாகிறது. இவரும் இவரது மனைவி சுப்பாத்தாளும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பல ஊர்களுக்கும் சுற்றி திரிந்த அவர்கள் கடைசியாக திருச்சி அருகே உள்ள பெட்டவாய்தலை பகுதிக்கு வந்துள்ளனர். அங்கே இவர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து தகவலறிந்த போலீஸார் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களது உடல் திருப்பூரில் உள்ள அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
மேலும் இது தற்கொலைதானா? திருப்பூரை சேர்ந்தவர்கள் ஏன் திருச்சியில் வந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்கிற ரீதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இறந்தவர்களின் மகனை தொடர்பு கொண்ட போலீஸார் காணாமல் போன தன் பெற்றோர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.