வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (18:32 IST)

மத்திய அரசுக்கு எதிராக களம் இறங்குகிறது திமுக – பொருப்பாளர்கள் விவரம்

தற்போது தமிழகத்தில் திமுக பெருவாரியான மக்களவை தொகுதிகளை வென்ற நிலையில் திமுகவின் எம்.பி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. பாராளுமன்றம் செல்லப்போகும் எம்.பிக்களுக்கான இந்த கூட்டத்தில் யார் யார் என்னென்ன பொறுப்புகளை எடுத்துகொள்ள வேண்டும் என்பதும் கலந்தாலோசிக்கப்படும்.

தற்போது திமுகவின் மக்களவை தலைவராக டி ஆர் பாலு, மக்களவை கொறடாவாக ஆ.ராசா, துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநிலங்களவை திமுக தலைவராக திருச்சி சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.