வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (18:01 IST)

தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக நினைவுச் சின்னம்

kunnur
கடந்த 2021 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விழுந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சின்னம் நினைவு தினமாக டிசம்பர் 8 ஆம் தேதி திறக்கப்ப்ட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

அந்த நினைவுச் சின்னத்தில் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.