வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (07:44 IST)

நீங்கள் செய்ய வேண்டியதை நான் செய்து வருகிறேன்: கருணாநிதியின் 5வது நினைவு நாளில் முதல்வர் உருக்கம்..!

karunanidhi
நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை நான் செய்து வருகிறேன் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஐந்தாவது நினைவு நாளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிக்கையில் ’தலைவர் கலைஞரே, நீங்கள் இருந்து செய்ய வேண்டியது நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன். தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களே. அப்படித்தான் இந்தியாவுக்கான குரலை எழுப்ப தொடங்கி இருக்கிறோம். 
 
அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு சுயமரியாதை சமூக நீதி, சமதர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இந்தியா என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
 
மேலும் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாவது நினைவு தினத்தை ஒட்டி  மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செய்து உள்ளார் என்பதும் அதேபோல் திருவாரூரில் உள்ள கலைஞர் கோட்டத்திலும் திமுக தொண்டர்கள் மரியாதை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva