‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ - கமல்ஹாசன்
''மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞர் பாரதியாரின் நினைவுகளைப் போற்றுகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், எழுத்தாளர், வசனகர்த்தா நடனக்கலைஞர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் எனப் பன்முகக் கலைஞராக இருக்கிறார்.
தற்போது, இந்தியன்2 படத்திலும், கமல்233 படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,
36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய் என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை.
பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறான். அதில் முதன்மையானது கேளடா மானிடவா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமை யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்
மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.