வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 19 நவம்பர் 2017 (23:28 IST)

உயிரிழந்த பெண்ணுக்கு 6 மணி நேரம் சிகிச்சையா? 'ரமணா' பாணி மோசடி என உறவினர்கள் ஆத்திரம்

கேப்டன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் உயிரிழந்த ஒருவருக்கு பலமணி நேரம் சிகிச்சை நடப்பது போன்ற ஒரு காட்சி வரும். அதே வகையில் திருவாரூரில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த பின்னரும் சிகிச்சை அளித்தது போல் மருத்துவர்கள் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.


 


திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மனைவி ஜெயபாரதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டாவது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தாலும் தாய் சீரியஸாக இருப்பதாகவும் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஜெயபாரதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தன்ர். ஜெயபாரதி தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாகவும், தங்களுடைய தவறை மறைக்கவே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் நடித்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.