திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (15:11 IST)

என் பேச்சு புரியவில்லையா?: விளக்கம் கூறும் விஜயகாந்த்!

என் பேச்சு புரியவில்லையா?: விளக்கம் கூறும் விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதில் இருந்து அவரது குரல் மிகவும் பாதிக்கப்பட்டு அவரது பேச்சு பலருக்கும் புரியாமல் போய்விட்டது. அரசியல் நிகழ்சிகள், பேட்டிகள் போன்றவற்றில் பேசும் விஜயகாந்தின் பேச்சு அவரது தொண்டர்களுக்கு புரிந்தால் கூட ஆச்சரியம் தான்.


 
 
இந்நிலையில் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையேற்றம் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் தனது பேச்சை தொடங்கும் முன்னர் கூட்டத்தில் இருந்தவர்களை பார்த்து என் பேச்சு புரிகிறதா என கேள்வி எழுப்பினர். பின்னர் எனது பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும் ஈபிஎஸ் போன்றாவர்களுக்கு புரியாது என்றார் அதிரடியாக.