திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (14:35 IST)

எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம களட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், கிறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை பேசினார். 
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர். அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று இதுகுறித்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யாது என கூறினர். இதனால் பலர் அதிருப்திக்கு ஆளாகினர்.
 
இதற்கிடையே நீதிபதி ரமேஷ் அமர்வு, தாமாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தது. ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா 4 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளது.