1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (11:18 IST)

நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் அவருக்கு சிலை நிறுவப்பட உள்ளது.
பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இது அவரது குடும்பத்தாரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அரசு மரியாதையுடன் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய அரசு ஸ்ரீதேவியின் மறைவிற்கு பின் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அளித்து கௌரவப்படுத்தியது.
 
ஸ்ரீதேவி நடித்த சாந்தனி, என்ற திரைப்படம்  சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றது. இதனால் அவரை கவுரவிக்க சுவிட்சர்லாந்து அரசு, ஸ்ரீதேவியின் உருவ சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.