வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (16:11 IST)

கட்டிடத்திற்குள் கசமுசா: உல்லாச மேஸ்திரியின் லீலைகள் அம்பலம்

சென்னை வில்லிவாக்கத்தில் கடத்தப்பட்ட மேஸ்திரியின் வழக்கில், அவரின் கள்ளக்காதல் லீலைகள் அம்பலமாகியுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புக்காக கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. வேகம்வேகமாக கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் தலைமை மேஸ்திரியாக மேற்குவங்கத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் அபிஜித் தாஸை, அங்கு வேலை செய்யும் சமையல்காரியான ஜோஸன்னா என்ற பெண் கடத்தி சென்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த மேஸ்திரிக்கும் ஜோசன்னாவிற்கும் தகாத உறவு இருந்ததும், இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. மேஸ்திரியிடம் பணம் இருப்பதை அறிந்த ஜோசன்னா ஆல் செட் பண்ணி, அபிஜித்தை கடத்தினார். பின்னர் அவரிடமிருந்த 30 ஆயிரத்தை பறித்துள்ளனர்.
 
இறுதியில் போலீஸார், ஜோசன்னா பிடியிலிருந்த அபிஜித்தை மீட்டனர். மேலும் ஜோசன்னாவையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.