ரஜினி பட டைலாக்கை பேசிய வாலிபரை பொளந்துகட்டிய மக்கள்

Sivaji
Last Modified புதன், 9 ஜனவரி 2019 (08:52 IST)
சென்னையில் பள்ளி மாணவியை வம்பிழுத்த இளைஞரை பொதுமக்கள் பொளந்துகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் மாணவி ஒருவர் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்வார். மாணவி இரண்டு நாட்கள் தனியாக செல்வதை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்து அந்த மாணவியை வழிமறித்தார்.
 
பின்னர் சிவாஜி படத்தில் ரஜினி ஸ்ரேயாவிடம் வாங்க பழகலாம் என கூறுவதுபோல அந்த மாணவியிடம் வா பழகலாம் என கூறி  வாலிபர் வம்பிழுத்துள்ளார். மேலும் மாணவியின் கையை பிடித்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டனர். மாணவியை வம்பிழுத்த அந்த வாலிபரை சூழ்ந்த மக்களிடம், வாலிபர் தான் பெரிய இடத்து பையன் என பீட்டர் விட்டுள்ளான். கொலவெறியில் இருந்த மக்கள் அவனை சகட்டுமேனிக்கு அடித்து துவைத்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறப்பாக கவனித்து வருகின்றனர். இவனை மாதிரியான ஆட்களுக்கு இது சிறப்பான தண்டனை என பலர் கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :