புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (13:00 IST)

தென் இந்தியாவில் தாமரை மலர்கிறது! தமிழிசை ட்விட்டால் கொதித்துப்போன தமிழ் மக்கள்!

தென் இந்தியாவில் தாமரை மலர்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டால் தமிழ் மக்கள் கடுப்பாகியுள்ளனர். 
 
மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று கர்நாடகாவில் கவிழ்ந்த நிலையில் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அரசு காபந்து அரசாக நீடிக்குமாறு கவர்னர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் பாஜக ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.எல்.ஏக்கள் தேவை. 
 
ஆனால், 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் 105 எம்.எல்.ஏக்கள் இருந்தால் ஆட்சி அமைத்து விடலாம். தற்போது பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தென்னிந்தியாவில் தாமரை மலர்கிறது! கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! வாழ்த்தி வரவேற்போம் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இந்த பதைவை கண்ட தமிழ் மக்கள் பலர் தென் இந்தியாவில் தாமரையா? வாய்ப்பே இல்லை கர்நாடகாவில் தாமரை மலரலாம், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் தாமரை மலரலாம் ஆனால் தமிழகத்தில் என்றுமே மலராது என கடும் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.