வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (11:38 IST)

தாய் கண்முன்னாள் சிறுமி வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாய் மற்றும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உள்ள மாசாப்பேட்டை பகுதியை சேந்தவர் பகுடு பாஸ்கரன். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். பாஸ்கரன் மேல் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில் சமீபத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஸ்கரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாஸ்கரன் வீட்டுக்கு அருகே 40 வயது பெண் ஒருவர் கணவனை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பாஸ்கரின் இரண்டாவது மனைவி துர்காவுக்கு அடிக்கடி சண்டை மூண்டு வந்துள்ளது. சமீபத்தில் விடுதலையான பாஸ்கரிடம் துர்கா இதுபற்றி சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த பாஸ்கரன் கடந்த 28ம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு மனைவி துர்காவுடன் சென்றுள்ளார்.

மனைவி துர்கா அந்த வீட்டை மூடிவிட்டு வெளியே காவலுக்கு இருந்துள்ளார். உள்ளே சென்ற பாஸ்கரன் 40 வயது பெண்மணியை கட்டி போட்டு அவர் முன்னாலேயே அவரது மகளான 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சிறுமியை நிர்வாணமாக செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். பின்னர் சிறுமியை கழிவறையில் வைத்து பூட்டிவிட்டு 40 வயது பெண்ணையும் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததுடன், அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி அடிக்கடி வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

ஒருகட்டத்திற்கு மேல் பாஸ்கரனின் தொல்லை தாங்காமல் அந்த பெண்மணி ராணிபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து பகுடு பாஸ்கரையும், அவரது மனைவியையும் கைது செய்த போலீஸார் செல்போன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K