திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:04 IST)

குழந்தை பலியான விவகாரம்: கள்ளக்காதலனுடன் உல்லாசம் இருந்த தாய் கைது

குழந்தை பலியான விவகாரம்:  கள்ளக்காதலனுடன் உல்லாசம் இருந்த தாய் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டையில் வசிப்பவர் துர்காதேவி(26) இவரது கணவர் ராஜதுரை(31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த  நிலையில், கடந்த  நவம்பர் 25 ஆம் தேதி  தன் தாய் மாமாவின் தோட்டத்திற்கு சென்ற துர்காதேவி, அன்றிரவில் தன் குழந்தை மாயமானதாகவும், கிணற்றில் இறந்து கிடந்ததாகவும் கூறினார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்தனர். அதில்,  அப்பகுதியைச் சேர்ந்த அஜய்க்கும், துர்காவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் உல்லாசமாக இருக்க இருவரும் காட்டிற்குள் சென்றபோது, குழந்தையை கிணற்றிற்கு அருகே விட்டுச் சென்றதும் அது தவறி கிணற்றில் விழுந்ததும் விசாரணையில் தெரிந்தது..

எனவே, துர்கா தேவியை கைது செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Edited by Sinoj