1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (10:21 IST)

கீர்த்தி சுரேஷ் போட்டோ டிபி; மோசடி பெண்ணின் வலையில் சிக்கிய இளைஞர்!

Fake id
கீர்த்தி சுரேஷ் போட்டோவை டிபியாக வைத்திருந்த மோசடி பெண்ணை உண்மை என நம்பி இளைஞர் ஒருவர் பல லட்சங்களை இழந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள விஜயாபூர் பகுதியை சேர்ந்தவர் பரசுராமா. ஹைதராபாத்தில் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து வரும் பரசுராமாவுக்கு சமீபத்தில் பேஸ்புக்கில் ப்ரெண்ட் ரெக்வஸ்ட் ஒன்று வந்துள்ளது. அதில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் படம் இருந்துள்ளது. படங்கள் பார்க்காத பரசுராமா அது நடிகை என தெரியாமல் யாரோ அழகான பெண் தன்னுடன் பேசுகிறார் என கருதியுள்ளார்.

பரசுராமா இப்படி நினைத்து பேசிய நிலையில் அதை பயன்படுத்திக் கொண்ட அந்த போலி ஐடி, தன்னை ஒரு கல்லூரி மாணவி என கூறி பரசுராமாவிடம் அடிக்கடி பேசி வந்ததுடன், அவசரமாக பணம் தேவை என அடிக்கடி பணம் வாங்கியும் வந்துள்ளது. காதலிப்பதாக பரசுராமாவை ஏமாற்றிய அந்த போலி ஐடி ஒருமுறை பரசுராமாவை நிர்வாணமாக வீடியோ அனுப்பும்படி கேட்டு அதை வைத்துக் கொண்டு பரசுராமாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளது.


ஒருகட்டத்திற்கும் பொறுக்க முடியாமல் காவல்நிலையத்தில் பரசுராமா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீஸார் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். மஞ்சுளாவை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த பரசுராமாவுக்கு தான் பார்த்த டிபி படம் நடிகை கீர்த்தி சுரேஷ் என பின்னர்தான் தெரிய வந்ததாம்.

பரசுராமாவை ஏமாற்றிய மஞ்சுளாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், இந்த மோசடிக்கு மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலி ஐடி வைத்த நடிகை போட்டோவை உண்மை என நம்பி ரூ.40 லட்சம் இழந்துள்ளார் பரசுராமா. பரசுராமாவை ஏமாற்றிய பணத்தில் கார், பைக், நகைகள் என ஆடம்பரமாக வாழ தொடங்கிய மஞ்சுளா வீடு ஒன்றையும் கட்டி வந்துள்ளார். இந்நிலையில்தான் பிடிபட்டுள்ளார்.

Edit By Prasanth.K