1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (10:15 IST)

ஆன்லைனில் எமனாக வந்த பிறந்த நாள் கேக்.. 10 வயது சிறுமி பரிதாப பலி..!

பிறந்தநாள் அன்று ஆன்லைனில் வாங்கிய கேக்கை சாப்பிட்ட பத்து வயது சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மான்வி என்ற 10 வயது சிறுமி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருடைய பெற்றோர் ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்தனர். இரவு ஏழு மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவரும் கேக் சாப்பிட்ட நிலையில் சில நிமிடங்களில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய 10 வயது சிறுமி சிகிச்சையின் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேக் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் பரிசோதனை முடிவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்ட விசாரணையில் பேக்கரியில் இருந்து வந்த கேக் கெட்டுப் போய் இருக்கலாம் என்றும் அதனால்தான் பிறந்தநாள் கொண்டாடிய 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த என கூறப்படுகிறது. இதனை அடுத்து கேக் கடை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் உறவினர்கள் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Edited by Siva