வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (11:41 IST)

தமிழ்நாட்டிலும் கனமழையால் நிலச்சரிவு! சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி!

landslide

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

File Image
 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலையடிவாரா, தாழ்வார பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வால்பாறை அருகே சோலாயார் அணை அருகே இடதுகரை என்ற பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 14 வயது சிறுமி உட்பட மூவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் காட்சிமுனை அருகே ஏற்பட்ட மண் சரிவால் உதகை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

இதேபோல கர்நாடகாவில் மங்களூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K