திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (21:05 IST)

'சர்கார்' படத்தை திரையிட்ட 8 தியேட்டர்களில் விசாரணை: மதுரை ஆட்சியர் தகவல்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னரும், ரிலீசுக்கு பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது குறித்து அனைவரும் அறிந்ததே. அந்த பிரச்சனைகளில் 'சர்கார்' படத்திற்காக திரையரங்குகள் அதிக கட்டணங்கள் வசூல் செய்தன என்பதும் ஒன்று

இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்த 8 திரையரங்கு உரிமையாளர்களிடம் ஜனவரி 8-ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து ஜனவரி 8-ம் தேதி நடக்கும் விசாரணை குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.